< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
தமிழ் சினிமாவில் இதுவரை சொல்லப்படாத புதுமையான திரைக்கதை
|16 Sept 2022 9:22 AM IST
தமிழ் சினிமாவில் மனோரீதியிலான படங்கள் அபூர்வமாகவே வருகின்றன. அந்த வகையில், தமிழ் சினிமாவில் இதுவரை சொல்லப்படாத புதுமையான திரைக்கதையில், திகில் படமாக, ‘பெண்டுலம்’ உருவாகிறது.
'அசுரன்' பட புகழ் அம்மு அபிராமி, கோமல் சர்மா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். அவர்களுடன் புதுமுகங்கள் பலரும் நடிக்கிறார்கள். முதல்முறையாக 8 கதாபாத்திரங்கள் முதன்மை பாத்திரங்களில் நடிக்கிறார்கள். விறுவிறுப்பான திகில் காட்சிகள் உள்ளன.
20 ஆண்டு கால திரைத்துறை அனுபவமுள்ள பி.சதீஸ் குமரன், இந்தப் படத்தின் மூலம் டைரக்டராக அறிமுகமாகிறார். திரவியம் பாலா தயாரிக்கிறார். சென்னை, தலக்கோணம், ஆந்திர மாநிலம் கர்னூல், கோவா ஆகிய இடங்களில் படப்பிடிப்பை நடத்த படக் குழுவினர் திட்டமிட்டு இருக்கிறார்கள்.