< Back
சினிமா செய்திகள்
பாலியல் வன்கொடுமைக்கு எதிராக இளையராஜா இசையில் விழிப்புணர்வு பாடல்
சினிமா செய்திகள்

பாலியல் வன்கொடுமைக்கு எதிராக இளையராஜா இசையில் விழிப்புணர்வு பாடல்

தினத்தந்தி
|
11 Feb 2023 3:26 PM IST

சமூகத்தில் குழந்தைகள் மீது நடைபெறும் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக இளையராஜா தனது இசையில் விழிப்புணர்வு பாடல் வீடியோவை உருவாக்கி உள்ளார்.

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் இடையே பயனுள்ள தகவல் தொடர்பு அவசியம் என்றும், பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகும் குழந்தையிடம் பெற்றோர் மனம் வீட்டு பேச வேண்டும் என்றும், தவறினால் அது குழந்தைக்கு மனச்சோர்வை ஏற்படுத்தி கடுமையாக துன்புறுத்தும் என்றும், வலியுறுத்தும் வகையில் இந்த பாடல் உருவாகி உள்ளது.

குழந்தை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு எதிராக போராட மக்களை ஒன்றிணைக்கவும், பாலியல் குற்றவாளிகளை தண்டிக்கவும் பாடலில் வலியுறுத்தப்பட்டு உள்ளது.

'யார் இந்த பேய்கள்' என்ற பெயரில் உருவாகி உள்ள இந்த பாடலை பா.விஜய் வரிகளில் யுவன் ஷங்கர் ராஜா பாடி உள்ளார். கிருத்திகா உதயநிதி இயக்கி உள்ளார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

மேலும் செய்திகள்