எமி ஜாக்சன் புதிய தோற்றம் வைரல்
|தமிழில் 'மதராசப்பட்டினம்' படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் எமி ஜாக்சன். தாண்டவம், ஐ, தங்கமகன், கெத்து, தெறி, 2.0 ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார்.
எமி ஜாக்சன் இங்கிலாந்து தொழிலதிபர் ஜார்ஜ் பனயிட்டோவை காதலித்தார். இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. திருமணத்துக்கு முன்பு 2019-ல் எமி ஜாக்சனுக்கு ஆண் குழந்தை பிறந்தது. ஜார்ஜை திருமணம் செய்து கொள்ள இருந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர்.
தற்போது பிரபல ஹாலிவுட் நடிகர் எட் வெஸ்ட்விக்கை, எமி ஜாக்சன் காதலித்து வருகிறார். இந்த நிலையில் எமிஜாக்சன் புதிய தோற்றத்தில் இருக்கும் புகைப்படம் வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகிறது.
அதில் தலைமுடியின் முன்பகுதியை மழித்து ஆளே அடையாளம் தெரியாமல் இருக்கிறார். இந்த தோற்றத்தை பார்த்து எமி ஜாக்சனுக்கு என்ன ஆனது என்று ரசிகர்கள் அதிர்ச்சியில் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
இத்தாலியில் நடைபெறும் ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க இந்த தோற்றத்தில் அவர் சென்று இருப்பதாக கூறப்படுகிறது.