'அமுல் பேபி' உடல் மெலிந்தார்
|தீவிரமான உடற்பயிற்சி மேற்கொண்டு, கடுமையான உணவு கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து மப்பும் மந்தாரமாக இருந்த ஹன்சிகா மோத்வானி தனது மேனியை மெலிந்த தேகமாக மாற்றி இருக்கிறார்.
தமிழ் சினிமாவின் 'அமுல் பேபி' என்று செல்லமாக அழைக்கப்பட்டவர் ஹன்சிகா மோத்வானி. குழந்தை சிரிப்பும், துருதுரு நடிப்பும் இவருக்கு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியது. இதனால் அவரை 'சின்ன குஷ்பு' என்றே அழைக்க தொடங்கினர். ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் குறைய தொடங்கியதும், தற்காலிகமாக சினிமாவுக்கு சிறிது காலம் ஓய்வு கொடுத்தார். சிறிய இடைவெளிக்குப் பிறகு 'மஹா' என்ற படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் அவருக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது. இதைத்தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களையே தேர்ந்தெடுத்து நடிக்க அவர் முடிவு செய்துள்ளார். இதற்காக அவர் தீவிரமான உடற்பயிற்சி மேற்கொண்டு, கடுமையான உணவு கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து மப்பும் மந்தாரமாக இருந்த தனது மேனியை மெலிந்த தேகமாக மாற்றி இருக்கிறார். தற்போது வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் ஹன்சிகா விரைவில் தாயகம் திரும்ப உள்ளார்.
தமிழ் மற்றும் தெலுங்கில் கைவசம் 5 படங்களை ஹன்சிகா மோத்வானி வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.