< Back
சினிமா செய்திகள்
எனது படங்களில் ரெஜினா முக்கியமான படமாக இருக்கும் - சுனைனா
சினிமா செய்திகள்

எனது படங்களில் "ரெஜினா" முக்கியமான படமாக இருக்கும் - சுனைனா

தினத்தந்தி
|
18 Jun 2022 2:43 PM GMT

மலையாள இயக்குனர் டோமின் டி சில்வா இயக்கத்தில் சுனைனா கதாநாயகியாக நடித்துள்ள திரைப்படம் "ரெஜினா".

மலையாள இயக்குனர் டோமின் டி சில்வா இயக்கத்தில் சுனைனா கதாநாயகியாக நடித்துள்ள திரைப்படம் "ரெஜினா". எல்லோ பியர் புரொடக்‌ஷன் தயாரிக்கும் இப்படத்திற்கு சதீஷ் நாயர் இசையமைக்கிறார். இப்படத்தின் பாடல்களை யுகபாரதி, விவேக் வேல்முருகன், விஜயன் வின்சென்ட் மற்றும் இஜாஸ். ஆர் எழுதியுள்ளனர்.

இந்த படத்திற்கு பவன் ஒளிப்பதிவு செய்கிறார். தமிழ், மலையாளம் என பல மொழிகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெங்கட் பிரபு வெளியிட்டார். இந்த படத்தின் பாடல்கள் மற்றும் ரிலீஸ் தேதி விரைவில் வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில் ரெஜினா திரைப்படம் குறித்து சுனைனா கூறும்போது, "மிகவும் சாதாரண ஹவுஸ் வொய்ஃப் ஆன ரெஜினா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். ரெஜினாவை சுற்றி நடக்கும் சில எதிர்பாராத சம்பவங்கள் தான் இக்கதை.

இயக்குனர் டோமின் டி. சில்வா ரெஜினா கதாபாத்திரத்தை அருமையாக வடிவமைத்திருக்கிறார். கதையை அவர் சொல்லும் போதே, இந்த படத்தை பார்க்க என் ஆவலை தூண்டியது. இயக்குனருடைய முந்தைய ஹிட் படங்களான "பைபிள் சுவத்திலே பிராணயம்", "ஸ்டார்" போன்ற படங்களை விட "ரெஜினா" படத்தின் திரைக்கதையை ஸ்டைலாக அமைத்துள்ளார். எனது படங்களில் "ரெஜினா" முக்கியமான படமாக இருக்கும்" என்றார்.

மேலும் செய்திகள்