< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
திருமணம் எப்போது? அம்மு அபிராமி விளக்கம்
|12 Aug 2022 5:39 PM IST
திருமணம் செய்து கொள்வதை விட எனது வாழ்க்கையில் நிறைவேற்ற பல கனவுகள் உள்ளன என்று அம்மு அபிராமி கூறியுள்ளார்.
விஷ்ணு விஷாலின் 'ராட்சசன்' படத்தில் நடித்து பிரபலமானவர் அம்மு அபிராமி. தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளியான 'அசுரன்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். என் ஆளோட செருப்ப காணோம். தீரன் அதிகாரம் ஒன்று, துப்பாக்கி முனை உள்ளிட்ட மேலும் பல படங்களில் நடித்து இருக்கிறார். தற்போது 6 புதிய படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் அம்மு அபிராமியிடம் உங்களுக்கு திருமணம் எப்போது என்று ரசிகர்கள் பலர் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்து அம்மு அபிராமி கூறும்போது, ''எனது திருமணம் குறித்து நிறைய கேள்விகள் வந்துள்ளன. எனக்கு 22 வயதுதான் ஆகிறது. திருமணம் செய்து கொள்வதை விட எனது வாழ்க்கையில் நிறைவேற்ற பல கனவுகள் உள்ளன. திருமணத்துக்கு இது சரியான நேரம் என்று நினைக்கும்போது திருமணம் செய்து கொள்வேன்" என்றார்.