< Back
சினிமா செய்திகள்
வேட்டையன் படத்தில் அமிதாப் பச்சனின் ஏஐ குரல்!
சினிமா செய்திகள்

'வேட்டையன்' படத்தில் அமிதாப் பச்சனின் ஏஐ குரல்!

தினத்தந்தி
|
26 Sept 2024 11:54 AM IST

'வேட்டையன்' படம் வருகிற அக்டோபர் மாதம் 10-ந் தேதி வெளியாக உள்ளது.

சென்னை,

'ஜெய்பீம்' படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் இயக்குனர் த.செ.ஞானவேல். இவர் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 170-வது படமான 'வேட்டையன்' படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் பகத் பாசில், துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ரித்திகாசிங் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

'வேட்டையன்' படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகவுள்ளது. சமீபத்தில், இப்படத்தின் முதல் பாடலான 'மனசிலாயோ' பாடல், இரண்டாவது பாடலான 'ஹண்டர் வண்டார்' பாடல் மற்றும் டீசர் ஆகியவை வெளியாகி வைரலாகி வருகின்றன. அதனை தொடர்ந்து சென்னையில் இசை வெளியீட்டு விழாவும் நடைபெற்றது.

இந்தப் படத்தில் அமிதாப் பச்சன் 'சத்யதேவ்' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் முன்னோட்ட விடியோவில் அமிதாப் பச்சனின் குரலுக்குப் பதிலாக பிரகாஷ் ராஜின் குரல் பயன்படுத்தப்பட்டிருந்தது. இது ரசிகர்கள் மத்தியில் எதிர் மறையான விமர்சனத்தை பெற்றது. இதைக் கருத்தில் கொண்டு படக்குழுவினர் அமிதாப் பச்சனின் குரலை ஏஐ தொழில் நுட்பத்தின் உதவியுடன் அனைத்து மொழிகளுக்கும் பயன்படுத்த உள்ளனர்.

இப்படம் வருகிற அக்டோபர் மாதம் 10-ந் தேதி வெளியாக உள்ளது. மேலும், படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி வருவதால், டிரெய்லர் வருகிற அக்டோபர் 2-ந் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் செய்திகள்