< Back
சினிமா செய்திகள்
Amitabh Bachchan, Varun Dhawan, Ayushmann Khurrana, Shraddha Kapoor and more congratulate Team India for defeating Pakistan at T20 World Cup
சினிமா செய்திகள்

பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்த சினிமா பிரபலங்கள்

தினத்தந்தி
|
10 Jun 2024 8:07 AM IST

பாகிஸ்தானை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா திரில் வெற்றிபெற்றது.

மும்பை,

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அமெரிக்காவின் நியூயார்க்கில் நேற்று நடைபெற்ற 19வது லீக் ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் மோதின.

இப்போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 19 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 119 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிக பட்சமாக ரிஷப் பண்ட் 31 பந்தில் 42 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து 120 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் பாகிஸ்தான் தொடக்க வீரர்களாக முகமது ரிஸ்வான், கேப்டன் பாபர் அசாம் களமிறங்கினர். இந்திய அணியின் அபாரமான பந்துவீச்சால் பாகிஸ்தான் 19 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 102 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் பாகிஸ்தானை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா திரில் வெற்றிபெற்றது.

இந்நிலையில், பாகிஸ்தானுக்கு எதிராக திரில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு சினிமா பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதன்படி, நடிகர்கள் அமிதாப் பச்சன், சோனு சூட், விஜய் வர்மா, வருண் தவான் மற்றும் நடிகைகள் பிரீத்தி ஜிந்தா, அனன்யா பாண்டே, ஷ்ரத்தா கபூர் உள்ளிட்டோர் இணையதளத்தில் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.


மேலும் செய்திகள்