< Back
சினிமா செய்திகள்
லதா தீனாநாத் மங்கேஷ்கர் புரஸ்கார் விருது பெற்ற அமிதாப் பச்சன்
சினிமா செய்திகள்

லதா தீனாநாத் மங்கேஷ்கர் புரஸ்கார் விருது பெற்ற அமிதாப் பச்சன்

தினத்தந்தி
|
25 April 2024 9:35 PM IST

லதா தீனாநாத் மங்கேஷ்கர் புரஸ்கார் விருது பெற்ற நடிகர் அமிதாப் பச்சன், இந்த விருதளித்து கவுரவிக்கப்பட்டதை தனக்குக் கிடைத்த அதிர்ஷ்டமாக உணர்வதாக கூறியுள்ளார்.

மும்பையில் நேற்று நடைபெற்ற தீனாநாத் மங்கேஷ்கர் விருது வழங்கும் விழாவில் நடிகர் அமிதாப் பச்சனுக்கு லதா தீனாநாத் மங்கேஷ்கர் விருது வழங்கப்பட்டது. நடிகர்கள் பத்மினி கோலாபுரே மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் ஆகியோரும் அமிதாப் விருது பெற்ற தருணத்தில் உடனிருந்தனர்.

கேட்போரின் ஆன்மாவை கரையச் செய்யும் பாடகரின் நினைவாக இந்த விருதைப் பெறுவது அதிர்ஷ்டம் என்று நடிகர் அமிதாப் நெகிழ்ந்துள்ளார். ஐந்து மங்கேஷ்கர் உடன்பிறப்புகளில் மூத்தவரான மெல்லிசை ராணி லதா மங்கேஷ்கர் நினைவாக அவரது குடும்பமும் அறக்கட்டளையும் இந்த விருதை வழங்கி வருகிறது.

மாஸ்டர் தீனநாத் மங்கேஷ்வர் புரஸ்கார் விருது இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானுக்கு மும்பையில் நேற்று வழங்கப்பட்டது. விருது பெற்ற பின்பு, "இப்படியொரு பெருமை எனக்கு கிடைத்திருப்பதில் ரொம்பவே சந்தோஷம்" எனக் கூறினார் ஏ.ஆர். ரகுமான்.

மேலும், இந்தப் புகைப்படங்களைப் பதிவிட்டு தனது மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினார். ஏ.ஆர். ரகுமான், அமிதாப் என விருது பெற்ற பிரபலங்களுக்கு ரசிகர்கள் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்