< Back
சினிமா செய்திகள்
முக்கிய வேடத்தில் அமிதாப்பச்சன்... ரஜினிகாந்தின் 170-வது படப்பிடிப்பு தொடங்கியது
சினிமா செய்திகள்

முக்கிய வேடத்தில் அமிதாப்பச்சன்... ரஜினிகாந்தின் 170-வது படப்பிடிப்பு தொடங்கியது

தினத்தந்தி
|
5 Oct 2023 6:44 AM IST

ரஜினிகாந்த் நடிக்கும் 170-வது படத்தின் படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் நேற்று தொடங்கியது. அமிதாப்பச்சன், பகத் பாசில் ஆகியோரும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளனர்.

இதில் ரஜினிகாந்த் பங்கேற்று நடித்தார். அங்கு இரண்டு வாரம் படப்பிடிப்பு நடக்கும் என்று தெரிகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்த ரவுடிகள் மோதல், கொலைகள், என்கவுண்ட்டர் போன்ற உண்மை சம்பவத்தை மையமாக வைத்து படம் தயாராவதாகவும், ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடிப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்த படத்தில் மஞ்சுவாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் ஆகிய 3 கதாநாயகிகள் நடிக்கிறார்கள். ராணாவும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். இந்த நிலையில் அமிதாப்பச்சன், பகத் பாசில் ஆகியோரும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளனர்.

இதன் மூலம் ரஜினியின் 170-வது படம் இந்தியா முழுவதும் கவனம் பெற்றுள்ளது. அமிதாப்பச்சன் நடிக்கும் முதல் நேரடி தமிழ்படம் இதுவாகும். 33 ஆண்டுகளுக்கு பிறகு இருவரும் இணைந்து நடிக்கிறார்கள்.

ஏற்கனவே 1991-ல் வெளியான 'ஹம்' இந்தி படத்தில் ரஜினியும், அமிதாப்பச்சனும் சேர்ந்து நடித்து இருந்தனர். ராணாவும், பகத் பாசிலும் வில்லனாக நடிக்க இருக்கிறார்கள். த.செ.ஞானவேல் டைரக்டு செய்கிறார்.

இது நல்ல கருத்துள்ள பொழுதுபோக்கு படமாக இருக்கும் என்று ரஜினி தெரிவித்து உள்ளார். படப்பிடிப்பில் பங்கேற்க ரஜினிகாந்த் திருவனந்தபுரம் சென்றுள்ளார்.

மேலும் செய்திகள்