< Back
சினிமா செய்திகள்
ரஜினிகாந்தின் தலைவர் 170 படத்தில் இணையும் அமிதாப் பச்சன், பகத் பாசில்..!
சினிமா செய்திகள்

ரஜினிகாந்தின் 'தலைவர் 170' படத்தில் இணையும் அமிதாப் பச்சன், பகத் பாசில்..!

தினத்தந்தி
|
3 Oct 2023 10:34 PM IST

‘தலைவர் 170’ படத்தில் நடிகர் பகத் பாசில், நடிகர் அமிதாப் பச்சன் ஆகியோர் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

லைகா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக உள்ள படத்திற்கு 'தலைவர் 170' என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டு உள்ளது. இந்த படத்தை 'ஜெய்பீம்' படத்தின் இயக்குனர் ஞானவேல் இயக்குகிறார்.

இந்த நிலையில் 'தலைவர் 170' படத்தின் படக்குழு குறித்த விவரத்தை தயாரிப்பு நிறுவனம் அறிவித்து வருகிறது. அதன்படி இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க உள்ளதாகவும், நடிகைகள் மஞ்சுவாரியர், துஷாரா விஜயன் மற்றும் ரித்திகா சிங் ஆகியோர் நடிக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து இன்று லைகா நிறுவனம் தனது 'எக்ஸ்' சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ரஜினிகாந்தின் 'தலைவர் 170' படத்தில் நடிகர் பகத் பாசில், நடிகர் ராணா டகுபதி ஆகியோர் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் இந்த படத்தில் பாலிவுட் திரையுலகின் மூத்த நடிகரான அமிதாப் பச்சன் நடிக்க உள்ளதாகவும் லைகா நிறுவனம் அறிவித்துள்ளது. ரஜினிகாந்தும், அமிதாப் பச்சனும் இணைந்து கடந்த 1991-ம் ஆண்டு வெளியான 'ஹம்' படத்தில் நடித்திருந்தனர். அதன்பிறகு தற்போது 32 ஆண்டுகளுக்கு பின் இருவரும் இணைந்து நடிக்க உள்ளனர். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.



மேலும் செய்திகள்