< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
ரஜினிகாந்த் மாறவே இல்லை, அதே எளிமை... - அமிதாப்பச்சன்
|5 May 2024 9:36 PM IST
‘வேட்டையன்’ படப்பிடிப்பில் நடிகர் ரஜினிகாந்த் உடன் இணைந்து, அமிதாப்பச்சன் எடுத்துக் கொண்டுள்ள புகைப்படங்களை அமிதாப் பச்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த், ஞானவேல் இயக்கும் 'வேட்டையன்' படத்தில் நடித்து வருகிறார். இதை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார். இதில் முக்கிய வேடத்தில் அமிதாப் பச்சன், பஹத் பாசில், ராணா, துஷாரா விஜயன், மஞ்சு வாரியர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு இப்போது மும்பையில் நடக்கிறது. அமிதாப்பச்சன், ரஜினிகாந்த் நடிக்கும் காட்சிகள் படமாகி வருகின்றன. இருவரும் சந்தித்துக் கொண்ட போட்டோ, சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்நிலையில் அந்தப் புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள அமிதாப்பச்சன், "தல ரஜினியுடன் மீண்டும் இணைந்திருப்பதில் பெருமையும் பாக்கியமும் அடைகிறேன். மிகச் சிறந்த நட்சத்திர அந்தஸ்து இருந்தபோதும் அவர் துளியும் மாறவே இல்லை. அதே எளிமையுடனும் அடக்கத்துடனும் சாதாரணமாகவே இருக்கிறார்" என்று வியந்து குறிப்பிட்டுள்ளார்.