< Back
சினிமா செய்திகள்
வேட்டையன் படப்பிடிப்பில் அமிதாப் பச்சன்-ரஜினிகாந்த்
சினிமா செய்திகள்

'வேட்டையன்' படப்பிடிப்பில் அமிதாப் பச்சன்-ரஜினிகாந்த்

தினத்தந்தி
|
3 May 2024 7:28 PM IST

நடிகர்கள் ரஜினிகாந்த், அமிதாப் பச்சனுடன் இணைந்து 'வேட்டையன்' படப்பிடிப்பின் போது எடுக்கப் பட்ட புகைப்படம் தற்பொழுது வைரலாகி வருகிறது.

ஜெயிலர், லால் சலாம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரஜினியின் 170-வது படத்தை 'ஜெய்பீம்' இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கி வருகிறார். படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார். இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா, துஷாரா விஜயன், மஞ்சு வாரியார், ரித்திகா சிங் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு 'வேட்டையன்' எனப் பெயரிட்டுள்ளனர்.


தூத்துக்குடி, சென்னை, ஆந்திரம் பகுதிகளில் படப்பிடிப்புகள் நடந்து முடிந்த நிலையில், தற்போது அடுத்தக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இப்படம் வருகிற அக்டோபர் மாதம் வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் நடிகர் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த்தின் வேட்டையன் படப்பிடிப்பு புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. மும்பையில் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது.


33 வருடங்களுக்கு பிறகு அமிதாப் பச்சனும் ரஜினிகாந்தும் இணைந்து நடிக்கவுள்ளனர். படத்தின் அறிமுக பாடலில் ரஜினிகாந்துடன் இணைந்து நடனமாடி இருக்கிறார் அனிருத்.

இதற்கு முன் 1991 ஆம் ஆண்டு 'ஹம்' என்ற இந்தி படத்தில் இணைந்து நடித்தது குறிப்பிடத்தக்கது. அமிதாப் பச்சன் நடிக்கும் முதல் தமிழ் திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்