மழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பிரார்த்தனை செய்த அமிதாப் பச்சன்
|மழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நடிகர் அமிதாப் பச்சன் பிரார்த்தனை செய்தார்.
சென்னை,
இந்தி திரையுலகின் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் 80 வயதிலும் சினிமா, தொலைக்காட்சி நிகழ்ச்சி படப்பிடிப்புகளில் சுறுசுறுப்பாக பங்கேற்று வருகிறார். மும்பையில் தான் மிகவும் விரும்பி கட்டிக் கொண்ட அழகிய ஜல்சா வீட்டில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அவர் தனது ரசிகர்களை சந்தித்து வருகிறார். மேலும், அவர்களோடு சேர்ந்து புகைப்படமும் எடுத்துக்கொள்கிறார்.
இந்த நிலையில் நடிகர் அமிதாப் பச்சன், தனது எக்ஸ் தளபக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் 'வெயில் காலத்திற்கு பிறகு தற்போது பெய்த இந்த மழை வரம் போன்றது, ஆனால் எதிர்பார்க்கப்பட்ட விவசாயத்தைத் தவிர இது பேரழிவையும் வெள்ளத்தையும் ஏற்படுத்தியுள்ளது, நிலப்பரப்பை அழித்து, வேதனையையும் துன்பத்தையும் ஏற்படுத்துகிறது
மழையினால் ஏற்பட்ட அழிவை விவரிப்பது கடினம், ஆனால் அனைவரும் நலமடையவும், நலனுடன் இருக்கவும் நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம்' என்று பதிவிட்டிருந்தார்.