பிரபல பாப் பாடகரின் காலணியை ஏலத்தில் வாங்கிய ரசிகர் - எத்தனை கோடி தெரியுமா?
|பிரபல பாப் பாடகரின் காலணி மிகப்பெரிய தொகைக்கு ஏலம் போயுள்ளது.
வாஷிங்டன்,
எல்விஸ் ஆரோன் பிரெஸ்லி ஒரு அமெரிக்க இசைக் கலைஞரும், நடிகரும் ஆவார். 20-ம் நூற்றாண்டில் பிரபலமான இசைக்கலைஞராக இருந்தார். இதனால் அவர் "ராக் அண்ட் ரோலின் மன்னன்" எனப் போற்றப்பட்டார். இவர் கடந்த 1977-ம் ஆண்டு உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.
1977-ல் பிரெஸ்லி மறைந்ததில் இருந்து, அவரது பல உடைகள், நகைகள் மற்றும் பிற நினைவுப் பொருட்கள் ஏலத்தில் ஆயிரக்கணக்கான டாலர்களுக்கு விற்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், 1950-களில் அவர் பயன்படுத்திய ஊதா நிற காலணி தற்போது மிகப்பெரிய தொகைக்கு ஏலம் போயுள்ளது.
பிரபல பாப் பாடகரும் நடிகருமான எல்விஸ் பிரெஸ்லியின் காலணி, ரூ.1.25 கோடிக்கு ஏலம் போயுள்ளது. அவரின் தீவிர ரசிகர் ஒருவர் இதனை வாங்கியுள்ளார். 1950களில் எல்விஸ் பிரெஸ்லி மேடை ஏறிப் பாடும்போது ஊதா நிறத்திலான காலணிகளை அதிக அளவில் பயன்படுத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.