< Back
சினிமா செய்திகள்
பாலியல் குற்றங்களை கண்டித்த அம்பிகா
சினிமா செய்திகள்

பாலியல் குற்றங்களை கண்டித்த அம்பிகா

தினத்தந்தி
|
28 Sept 2022 8:37 AM IST

பாலியல் குற்றங்களை கண்டித்த நடிகை அம்பிகா டுவிட்டரில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.

தமிழ், திரை உலகில் 1980-களில் கதாநாயகியாக கொடி கட்டி பறந்த அம்பிகா அப்போதைய முன்னணி கதாநாயகர்கள் அனைவருக்கும் ஜோடியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை தக்கவைத்து இருந்தார். தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட அனைத்து தென்னிந்திய மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சமீப காலமாக குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து கருத்துகளையும் பதிவிடுகிறார். இந்த நிலையில் புனித தோமையார் காவல் நிலையத்தில் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளதாக சென்னை காவல் துறை சமூக வலைத்தளத்தில் பதிவு வெளியிட்டதற்கு நடிகை அம்பிகா டுவிட்டரில் கருத்து ஒன்றை பதிவிட்டு உள்ளார்.

அதில் ''பாலியல் குற்றங்கள் உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ இருந்தாலும் குற்றவாளிகள் உடனடியாக தண்டிக்கப்பட வேண்டும். சிறாராக இருந்தாலும் சரி நூறு வயது உடையவராக இருந்தாலும் சரி குற்றம் குற்றமே" என்று கூறியுள்ளார். அம்பிகாவின் பரிந்துரைக்கு காவல் துறை நன்றி தெரிவித்து பதிவு வெளியிட்டு உள்ளது.

மேலும் செய்திகள்