< Back
சினிமா செய்திகள்
Amaran - Actress Sai Pallavi in ​​dubbing process
சினிமா செய்திகள்

'அமரன்' - டப்பிங் பணியில் நடிகை சாய் பல்லவி

தினத்தந்தி
|
9 Aug 2024 10:53 AM IST

நடிகை சாய் பல்லவி 'அமரன்' படத்தின் டப்பிங் பணிகளில் ஈடுபட்டுள்ளார்.

மும்பை,

பிரேமம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சாய் பல்லவி. அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய இப்படம் ஹிட்டானது. தமிழகத்தில் இந்தப் படம் 200 நாட்களுக்கு மேல் ஓடி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதில் சாய் பல்லவி நடித்த 'மலர் டீச்சர்' கதாபாத்திரம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தது. முதல் படத்திலேயே சாய் பல்லவிக்கு சிறந்த நடிகை என்று பெயர் கிடைத்ததை தொடர்ந்து தமிழ் படத்தில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தன.

தற்போது, சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அமரன் படத்தில் சாய் பல்லவி நடித்துள்ளார். இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் காஷ்மீரில் படமாக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், நடிகை சாய் பல்லவி மும்பையில் இப்படத்தின் டப்பிங் பணிகளில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி பகிர்ந்திருக்கிறார்.

அமரன் படம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் மாதம் 31-ம் தேதி திரைக்கு வரவுள்ளது. அமரனை தொடர்ந்து சாய் பல்லவி, நாக சைதன்யா ஜோடியாக தண்டேல் படத்திலும், ராமாயணம் படத்தில் சீதையாகவும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்