`அமரன்' திரைப்படம் வெளியாக 50 நாட்கள் இருப்பதையடுத்து கிளிம்ப்ஸ் வீடியோவை பகிர்ந்த படக்குழு
|'அமரன்' திரைப்படம் அடுத்த மாதம் 31-ந் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது.
சென்னை,
இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் 'அமரன்'. ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். சிவகார்த்திகேயன் இந்த படத்தில் 'முகுந்தன்' என்ற கதாபாத்திரத்தில் ராணுவ வீரராக நடித்துள்ளார். புவன் அரோரா, சுரேஷ் சக்கரவர்த்தி, ஸ்ரீகுமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
'அமரன்' திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் 31-ந் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இப்படம் வெளியாக இன்னும் 50 நாட்கள் இருப்பதையடுத்து படக்குழு கிளிம்ப்ஸ் வீடியோவை பகிர்ந்துள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தீபாவளியன்று பல முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாக உள்ளன. அதன்படி, ஜெயம் ரவி நடித்துள்ள பிரதர், கவினின் பிளடி பெக்கர், துல்கர் சல்மான் நடித்துள்ள லக்கி பாஸ்கர் உள்ளிட்ட படங்கள் வெளியாக உள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.