முத்தக்காட்சி சர்ச்சைக்கு அமலாபால் விளக்கம்
|தமிழில் மைனா, வேட்டை, தலைவா, வேலை இல்லா பட்டதாரி, ராட்சசன், ஆடை உள்ளிட்ட பல படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வந்த அமலாபால் தெலுங்கு, மலையாளத்திலும் பிரபல நடிகையாக உயர்ந்தார். டைரக்டர் விஜய்யை காதலித்து மணந்து பின்னர் விவகாரத்து செய்து பிரிந்து விட்டார். தற்போது படங்களில் கவர்ச்சி காட்சிகளில் துணிச்சலாக நடித்து வருகிறார்.
பிருதிவிராஜ் ஜோடியாக ஆடு ஜீவிதம் மலையாள படத்தில் நடித்து முடித்துள்ளார். கடன் தொல்லையால் அவதிப்படும் பிருதிவிராஜ் அதை அடைக்க வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்று அங்கு ஆடு மேய்ப்பவராக மாறி என்னென்ன கஷ்டங்களை அனுபவிக்கிறார் என்பதை மையமாக வைத்து இந்த படம் உருவாகி உள்ளது.
இதில் அமலாபால் பிருவிதிராஜுக்கு உதட்டோடு உதடு சேர்த்து முத்தமிடும் காட்சியில் நடித்து இருக்கிறார். இந்த முத்தக்காட்சி புகைப்படங்கள் வலைத்தளத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. பலர் அமலாபாலை விமர்சித்து கருத்துகள் பதிவிட்டனர்.
இதற்கு அமலாபால் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறும்போது, "பிருதிவிராஜ் கதை சொல்லும்போதே முத்தக்காட்சி இருப்பது பற்றி தெரிவித்தார். கதைக்கு தேவையாக இருந்ததால் முத்தக்காட்சியில் நடித்தேன்'' என்றார்.