< Back
சினிமா செய்திகள்
அமலா பால் நடிக்கும் அதோ அந்த பறவை போல படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
சினிமா செய்திகள்

அமலா பால் நடிக்கும் 'அதோ அந்த பறவை போல' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

தினத்தந்தி
|
6 Aug 2022 8:35 PM IST

நடிகை அமலா பால் நடித்துள்ள 'அதோ அந்த பறவை போல' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

செஞ்சுரி இன்டர்நேஷனல் பிலிம்ஸ் சார்பில் ஜோன்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் கே.ஆர்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'அதோ அந்த பறவை போல'. அமலா பால் கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தில் ஆஷிஷ் வித்யார்த்தி, சமீர் கோச்சார், பிரவீன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இளம் தொழிலதிபரான அமலாபால் அடர்ந்த காட்டுக்குள் சென்று, வெளிவர முடியாமல் தவிக்கிறார். காட்டுக்குள் சிக்கித் தவிக்கும் அமலாபால், என்னென்ன இன்னல்களை அனுபவிக்கிறார், வனப்பகுதிக்குள் இருக்கும் மிருகங்கள், காட்டுவாசிகளிடமிருந்து எப்படி தப்பிக்கிறார் என்பதை மையப்படுத்திய திரில்லர் கதையாக திரைக்கதையை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் கே.ஆர்.வினோத்.

பல எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவான இந்த படம் சில காரணங்களால் வெளிவராமல் இருந்தது. இந்த திரைப்படத்தை வி ஸ்கொயர் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பாக வெளியிடுகின்றனர். இந்த நிலையில் 'அதோ அந்த பறவை போல' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 26-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.



மேலும் செய்திகள்