< Back
சினிமா செய்திகள்
என் சகோதரரைப்போலவே என் கணவர் உள்ளார் - வீடியோ பகிர்ந்த அமலாபால்
சினிமா செய்திகள்

'என் சகோதரரைப்போலவே என் கணவர் உள்ளார்' - வீடியோ பகிர்ந்த அமலாபால்

தினத்தந்தி
|
12 April 2024 9:33 AM IST

அமலாபால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த வீடியோ வைரலானதையடுத்து ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சென்னை,

தமிழ் சினிமாவில் 'வீரசேகரன்' என்கிற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை அமலா பாலை, சர்ச்சை நாயகியாக மாற்றியது 'சிந்து சமவெளி' திரைப்படம். இதைத்தொடர்ந்து இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் அமலாபால் நடித்த 'மைனா' திரைப்படம் இவருடைய திரை உலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

தொடர்ந்து தன்னுடைய திரையுலக வாழ்க்கையில் முன்னணி இடத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த அமலா பால், 'தலைவா' மற்றும் 'தெய்வத்திருமகள்' படத்தில் நடிக்கும்போது இப்படத்தின் இயக்குனர் ஏ.எல்.விஜயை காதலித்து கடந்த 2013-ம் ஆண்டு, இரு தரப்பு குடும்பத்தினர் சம்மதத்துடன் திருமணம் செய்தார்.

பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக திருமணமான நான்கு வருடங்களில், இருவரும் ஒருமித்த மனதுடன் விவாகரத்து பெற்று பிரிந்து சென்றனர். அதன் பின்னர் தனது நீண்ட நாள் நண்பர் ஜெகத் தேசாய் என்பவரை அமலாபால் கடந்த வருடம் நவம்பர் 3-ம் தேதி திருமணம் செய்துகொண்டார். தற்போது அமலாபால் கர்ப்பமாக உள்ளார். சமீபத்தில், இவர் நடிப்பில் வெளிவந்த ஆடுஜீவிதம் திரைப்படம் பிரமாண்ட வரவேற்பை பெற்று ரூ.100 கோடிக்கும் மேல் வசூலித்து வருகிறது.

இந்நிலையில், அமலாபால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கணவருடன் ஜூஸ் குடிக்கும் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதனுடன் பகிர்ந்த பதிவில், என் சகோதரரைப்போலவே என் கணவரும் உள்ளார். முன்பு என் சகோதரர்தான் என் உணவை திருடி சாப்பிடுவார். இப்போது என் கணவரும் அவ்வாறு செய்ய ஆரம்பித்துவிட்டார். இப்படி உங்கள் உணவை திருடி சாப்பிடுபவர் யார்?. இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்த வீடியோ வைரலானதையடுத்து ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்