சஸ்பென்ஸ் - திகில் படத்தில் தடயவியல் துறை நிபுணராக அமலாபால்
|கடாவர் படத்தில் தடயவியல் துறை நிபுணராக நடிகை அமலா பால் நடித்துள்ளார்.
அமலாபால் கதையின் நாயகியாக நடித்து வரும் படத்துக்கு, 'கடாவர்' என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். இது, ஒரு திகில் படம். மலையாள டைரக்டர் அனூப் எஸ்.பணிக்கர் டைரக்டு செய்து இருக்கிறார்.
அமலாபாலுடன் ஹரிஸ் உத்தமன், முனிஷ்காந்த், பசுபதி, நிழல்கள் ரவி, வேலு பிரபாகர், அதுல்யா ரவி, ரித்விகா ஆகியோரும் நடித்து இருக்கிறார்கள்.
மருத்துவம் சார்ந்த குற்றப் பின்னணியிலான திகில் படம் இது. முதுகுத்தண்டை சில்லிட வைக்கும் சஸ்பென்ஸ் மற்றும் திடுக்கிடும் திருப்பங்கள் நிறைந்த திரைக்கதை. இதில் தடயவியல் துறை நிபுணர் பத்ராவாக அமலாபால் நடிக்கிறார். படத்தின் தயாரிப்பாளரும் அவரே.
நகரில் திடீர் திடீர் என்று மர்மமான முறையில் வரிசையாக கொலைகள் நடக்கின்றன. போலீஸ் விசாரணை முடியும் நேரத்தில் கொலைகாரனையும், கொலைக்கான பின்னணியையும் அமலாபால் கண்டுபிடிப்பது போல் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.