< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
கணவருக்கு லிப் லாக்...முதலாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடிய அமலா பால்
|13 Aug 2024 8:24 PM IST
நடிகை அமலா பால் அவரது கணவர் இருவரும் சந்தித்து ஓராண்டு நிறைவடைந்ததை கொண்டாடியுள்ளார்.
சென்னை,
ஏ.எல். விஜய்யுடன் விவாகரத்து நடைபெற்ற நிலையில், நடிகை அமலா பால் ஜகத் தேசாய் என்பவரை காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார். அமலா பாலுக்கு திருமணம் நடைபெற்று ஓராண்டு நிறைவடைந்த நிலையில் இன்று கேக் வெட்டி தனது முதலாம் ஆண்டு திருமண கொண்டாடினார்.
கணவர் ஜகத் தேசாய்க்கு லிப் லாக் அடித்து திருமண நாளை கொண்டாடிய ரொமான்டிக் புகைப்படத்தையும் அமலா பால் சமூக வலைதளத்தில் ஷேர் செய்துள்ளார். கணவருடன் ரொமான்ஸ் செய்யும் போட்டோக்களையும் அமலா பால் வெளியிட்டு லைக்குகளை அள்ளி வருகிறார். நடிகை அமலா பாலின் புகைப்படங்கள் இணையத்தில் படு வைரலாகி வருகிறது
நடிகை அமலா பால் ஜகத் தேசாய் என்பவரை கடந்த ஆண்டு ஆகஸ்ட் 13ம் தேதி அமலா பால் காதலித்து திருமணம் செய்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.