நீண்ட இடைவெளிக்கு பிறகு நடனமாடி அசத்திய அமலா
|தமிழ் சினிமாவின் 1980 மற்றும் 90-களின் காலகட்டங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர், அமலா. மலையாளம், தெலுங்கு, இந்தி, கன்னட படங்களிலும் நடித்துள்ளார்.
1992-ம் ஆண்டு நடிகர் நாகர்ஜூனாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
திருமணத்துக்கு பின்னர் சில படங்களில் முக்கிய வேடங்களில் நடித்தார். சில டெலிவிஷன் தொடர்களிலும் பங்கேற்றார்.
பெரிய அளவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாத அமலா, ஐதரபாத்தில் தங்களுக்கு சொந்தமான அன்னபூர்ணா பிலிம் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
விழாவில், கணவர் நாகர்ஜூனா நடித்த பிரபலமான படங்களில் இருந்து ஒலிபரப்பப்பட்ட சில பாடல்களுக்கு நடனம் ஆடினார். இதனை கல்லூரி மாணவர்களும், பார்வையாளர்களும் ரசித்து பார்த்தனர்.
திருமணத்துக்கு பின்னர் அவர் பெரும்பாலும் மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்றது கிடையாது. நீண்ட இடைவெளிக்கு பிறகு அவர் மேடையேறி நடனம் ஆடியது ரசிகர்களுக்கு பரவசத்தை அளித்தது. அமலா நடனமாடும் வீடியோ காட்சிகளும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கணவர் நாகர்ஜூனாவுடன் அமலா 5 படங்களில் ஜோடியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.