< Back
சினிமா செய்திகள்
நான் 2-வது கதாநாயகியா? கடுப்பான மாளவிகா மோகனன்
சினிமா செய்திகள்

நான் 2-வது கதாநாயகியா? கடுப்பான மாளவிகா மோகனன்

தினத்தந்தி
|
23 March 2023 7:07 AM IST

தமிழில் ரஜினிகாந்துடன் பேட்ட படத்தில் நடித்து பிரபலமானவர் மாளவிகா மோகனன். மாஸ்டர் படத்தில் விஜய் ஜோடியாக நடித்து இருந்தார். மலையாள, கன்னட மொழிகளிலும் அதிக படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்துள்ளார். தற்போது தெலுங்குக்கு போய் உள்ளார்.


பவன் கல்யாண் நடிக்கும் உஸ்தாத் பகத் தெலுங்கு படத்தில் மாளவிகா மோகனன் இரண்டாவது கதாநாயகியாக நடிக்க இருப்பதாகவும் முதல் கதாநாயகியாக வேறு ஒரு பிரபல நடிகை நடிக்கிறார் என்றும் இணைய தளங்களில் தகவல் பரவியது. தன்னை 2-வது கதாநாயகி என்றதால் மாளவிகா மோகனன் கடுப்பாகி உள்ளார்.


இதற்கு பதிலடியாக மாளவிகா மோகனன் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், "நான் பவன் கல்யாண் மீது மரியாதை வைத்து இருக்கிறேன். ஒரு விஷயத்தை தெளிவுபடுத்துகிறேன். பவன் கல்யாணின் படத்தில் நான் இல்லை. ஆனால் இன்னொரு சிறந்த தெலுங்கு படத்தில் நடித்து வருகிறேன்.


அந்த படத்தில் நான் இரண்டாவது கதாநாயகியாக நடிக்கவில்லை. முதல் நாயகியாகத்தான் நடிக்கிறேன். நான் தெலுங்கில் அறிமுகமாகும் முதல் படம் இதுதான்'' என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு பரபரப்பாகி உள்ளது.

மேலும் செய்திகள்