< Back
சினிமா செய்திகள்
தொழில் அதிபருடன் எனக்கு திருமணமா? நடிகை தமன்னா விளக்கம்
சினிமா செய்திகள்

தொழில் அதிபருடன் எனக்கு திருமணமா? நடிகை தமன்னா விளக்கம்

தினத்தந்தி
|
8 Dec 2022 10:54 AM IST

நடிகை தமன்னா தொழில் அதிபரை மணக்கப்போகிறார் என்று வலைத்தளத்தில் தகவல் பரவி உள்ளது. இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில்

தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் தமன்னாவுக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாகவும், தொழில் அதிபரை மணக்கப்போகிறார் என்றும் வலைத்தளத்தில் தகவல் பரவி உள்ளது. இதுகுறித்து நடிகை தமன்னா அளித்துள்ள பேட்டியில், ''நான் சினிமாவுக்கு வந்து 17 ஆண்டுகள் ஆகிவிட்டன. இத்தனை வருடம் சினிமாவில் நீடிப்பேன் என்று நினைக்கவில்லை. பெரிய ஹீரோ, சின்ன ஹீரோ என்ற வித்தியாசம் பார்க்காமல், யாரோடும் சேர்ந்து நடிக்க தயார். எனது கதாபாத்திரம் சிறப்பாக இருக்க வேண்டும் என்று மட்டுமே பார்க்கிறேன். சகஜமாகவே பெண்களுக்கு திருமண வயது வந்தவுடன் எல்லோரும் திருமணத்தைப் பற்றி கேட்பார்கள். எங்கள் வீட்டில் கூட என்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தி வருகிறார்கள். வரன் கூட தேடுகிறார்கள். ஆனால் நான் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. என் திருமணம் குறித்து சமூக வலைத்தளத்தில் வரும் வதந்திகளை நம்பவேண்டாம். ஏற்கனவே எனக்கு ஒரு டாக்டருடன் திருமணம் செய்து வைத்தார்கள். இப்போது ஒரு தொழில் அதிபரை திருமணம் செய்து கொள்ளப்போகிறேன் என்கிறார்கள். திருமணம் குறித்து நான் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. அந்த நேரம் வரும்போது நானே சொல்கிறேன்" என்றார்.

மேலும் செய்திகள்