எனக்கு திருமணமா? ஷெரின் விளக்கம்
|தமிழில் தனுஷ் ஜோடியாக துள்ளுவதோ இளமை படம் மூலம் அறிமுகமானவர் ஷெரின். ஸ்டூடன்ட் நம்பர் 1, விசில், கோவில்பட்டி வீரலட்சுமி, உற்சாகம், பூவா தலையா, நண்பேண்டா உள்ளிட்ட படங்களிலும் நடித்து இருக்கிறார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றும் பிரபலமானார்.
ஷெரின் ரசிகர்களிடம் உரையாடியபோது ஒருவர் உங்கள் திருமணம் எப்போது? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு இன்னும் ஒரு மாதத்தில் நடக்கும் என்று பதில் அளித்தார். இதையடுத்து ஷெரினுக்கு ஒரு மாதத்தில் திருமணம் நடக்க உள்ளதாக வலைத்தளத்தில் தகவல் பரவியது. அதை பார்த்து பலரும் ஷெரினுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இதற்கு விளக்கம் அளித்து ஷெரின் வீடியோ வெளியிட்டு உள்ளார். அதில் அவர் கூறும்போது, "உங்களுக்கு எப்போது திருமணம் என்று கேட்டதும் ஒரு மாதத்தில் திருமணம் நடக்கும் என்று காமெடியாக பதில் சொன்னேன். நகைச்சுவையாக நான் சொன்னதை இவ்வளவு பெரிய அளவில் வைரல் ஆக்குவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. எனக்கு ஒரு மாதத்தில் திருமணம் இல்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்'' என்றார்.