'ஆல்பா' திரைப்படம்: ஆலியா பட், ஷர்வரி வாக்கின் இன்ஸ்டா பதிவு வைரல்
|ஆலியா பட் மற்றும் ஷர்வரி வாக் 'ஆல்பா' படப்பிடிப்பிற்காக காஷ்மீர் சென்றுள்ளனர்.
காஷ்மீர்,
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை ஆலியா பட். இவர் தற்போது ஒய்ஆர்எப் ஸ்பை யுனிவர்ஸின் அடுத்த படத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு 'ஆல்பா' என்று பெயரிடப்பட்டுள்ளது. ஷர்வரி வாக் உடன் ஆலியா பட் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்த படத்தினை 'தி ரயில்வே மென்' என்ற தொடர் மூலம் அறியப்பட்ட இயக்குனர் ஷிவ் ரவைல் இயக்குகிறார். மேலும் இப்படத்தினை ஆதித்யா சோப்ரா தயாரிக்க உள்ளார். இந்த படத்திற்கான படப்பிடிப்புகள் மும்பை மற்றும் காஷ்மீரில் நடைபெற உள்ளது. ஆக்சன் படமாக தயாராக இந்த படத்தில் பாபி தியோல் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தநிலையில், நடிகைகள் ஆலியா பட் மற்றும் ஷர்வரி வாக் ஆகியோர் படக்குழுவினருடன் இணைந்து படப்பிடிப்பிற்காக காஷ்மீர் சென்றுள்ளனர். அப்போது இந்த இரண்டு நடிகைகளும், படப்பிடிப்பின் போது மூடுபனியால் சூழப்பட்ட பைன் மரங்களின் நடுவே எடுத்த புகைப்படத்தை தங்களின் இன்ஸ்டாகிராம் பக்கதில் வெளியிட்டுள்ளனர்.
அதில் ஒருவரையொருவர் கட்டித்தழுவி ஒரு கையை மற்றவரின் தோளில் போட்டுக் கொண்டு தங்கள் கைகளால் இதய வடிவத்தை உருவாக்கிக் கொண்டுள்ள புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே உற்சாகத்தை தூண்டியுள்ளது. இந்த புகைப்படம் வைரலாகி வருவதால் 'ஆல்பா' படத்திற்கான எதிர்பார்ப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.