< Back
சினிமா செய்திகள்
Allu Arjun who starred in Kamal Haasans film - Do you know which film?
சினிமா செய்திகள்

கமல்ஹாசனுடன் நடித்த அல்லு அர்ஜுன் - எந்த படம் தெரியுமா?

தினத்தந்தி
|
16 Sep 2024 6:05 AM GMT

அல்லு அர்ஜுன் மற்றும் கமல்ஹாசன் இருவரும் இணைந்து நடித்த ஒரே படம் இதுதான்.

சென்னை,

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அல்லு அர்ஜுன். இவர் நடிப்புக்காக பிலிம்பேர் சவுத் மற்றும் நந்தி விருதுகளைப் பெற்றுள்ளார். இவர் கடந்த 2003 ல் வெளியான 'கங்கோத்ரி' மூலம் தெலுங்குத் துறையில் கதாநாயகனாக அறிமுகமாகி இருந்தாலும், தனது நடிப்பு பயணத்தை குழந்தை நட்சத்திரமாகத் தொடங்கினார் என்பது பலருக்குத் தெரியாது. ஆம், அவருக்கு ஒருமுறை பழம்பெரும் நடிகர் கமல்ஹாசனுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அதன்படி, அல்லு அர்ஜுன் கடந்த 1986-ம் ஆண்டு வெளியான 'சுவாதி முத்யம்' என்ற படத்தில் கமல்ஹாசனுடன் பணியாற்றினார். இதில், அல்லு அர்ஜுன் கமல்ஹாசனின் பேரனாக நடித்தார். அல்லு அர்ஜுன் மற்றும் கமல்ஹாசன் இருவரும் இணைந்து நடித்த ஒரே படம் இதுதான்.

இப்படம் தமிழில் 'சிப்பிக்குள் முத்து' என்ற பெயரில் வெளியானது. இளையராஜா இசையமைத்த இப்படம் பல பாராட்டுகளை பெற்றது. அல்லு அர்ஜுன் குழந்தை நட்சத்திரமாக நடித்த படம் இது மட்டுமல்ல. சுவாதி முத்யம் வெளியாவதற்கு ஒரு வருடம் முன்பு, சிரஞ்சீவி நடித்த 'விஜேதா'வில் குழந்தை நட்சத்திரமாக தோன்றினார்.

தற்போது அல்லு அர்ஜுன் , 'புஷ்பா 2' படத்தில் நடித்து வருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இப்படம் வரும் டிசம்பர் மாதம் 6-ம் தேதி திரைக்கு வரவுள்ளது.

மேலும் செய்திகள்