ஜவானில் மாஸான கெஸ்ட் ரோல்...! விஜய் நோ சொன்னதால் பிரபல நடிகருக்கு வாய்ப்பு
|ஷாருக்கான் ‘பதான்’ படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வெற்றியை தொடர்ந்து அவரது நடிப்பில் அட்லீ இயக்கத்தில் உருவாகும் படம் ‘ஜவான்’.
சென்னை
சுகுமார் இயக்கிய புஷ்பா படத்தின் மூலம் அல்லு அர்ஜுன் இந்திய அளவில் பிரபல நட்சத்திரமாக உருவெடுத்தார். ஸ்டைலிஷ் நட்சத்திரமான இவர் இப்போது பாலிவுட்டில் அறிமுகமாகும் முடிவில் இருக்கிறார். அல்லு அர்ஜூன் ஜவான் படத்தில் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும், இது ஒரு கெஸ்ட் ரோலாகும்.
ஷாருக்கானின் 'ஜவான்' படத்தின் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க அல்லு அர்ஜுனை படத்தின் இயக்குநர் அட்லீ நாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு அவர் ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் அல்லு அர்ஜுனின் முதல் இந்தி படமாக 'ஜவான்' இருக்கும்.
ஷாருக்கான் 'பதான்' படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வெற்றியை தொடர்ந்து அவரது நடிப்பில் அட்லீ இயக்கத்தில் உருவாகும் படம் 'ஜவான்'. நயன்தாரா நாயகியாக நடிக்கும் இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கிறார். நகைச்சுவை கேரக்டரில் யோகிபாபுவும் நடிக்கின்றனர். ஜவான் படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார்.
இப்படம் வருகின்ற ஜூன் மாதம் ரிலீஸ் செய்யப்படும் என ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதால், தற்போது படத்தின் ஷூட்டிங் வேகமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஓரிரு மாதத்தில் முடிவடையும் என கூறப்படுகிறது.
'பதான்' படத்தில் சிறப்புத் தோற்றத்தில் சல்மான் கானின் ஆக்ஷன் காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அந்த வகையில் பான் இந்தியா படமாக உருவாகும் 'ஜவான்' படத்தில் நடிகர் விஜyகெஸ்ட் ரோலில் நடிக்க இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது. ஆனால் விஜய் தற்போது லியோ பட ஷூட்டிங்கில் பிசியாக உள்ளதால் அவர் அப்படத்தில் நடிக்க முடியவில்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக விஜய்க்கு நிகரான மாஸ் நடிகரை அதில் நடிக்க வைக்க வேண்டும் என தொடர்ந்து பல்வேறு நடிகர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினாராம் அட்லீ.
நடிக்க அல்லு அர்ஜுனை படத்தின் இயக்குநர் அட்லீ நாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரின் ஒப்புதலுக்கு அட்லீ காத்துக்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
ஒருவேளை படத்தில் நடிக்க அல்லு அர்ஜுன் ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் 'ஜவான்' அல்லு அர்ஜுனின் முதல் இந்திப் படமாக இருக்கும். மேலும், அல்லு அர்ஜூனின் 'புஷ்பா' பான் இந்தியா வெளியீடு என்ற முறையில் இந்தி பேசும் மாநிலங்களில் படத்திற்கான வரவேற்பு அமோகமாக இருந்தது.
ஏற்கெனவே 'புஷ்பா' மூலம் இந்தி ரசிகர்களின் மனதில் பதிந்துவிட்ட அல்லு அர்ஜுனை 'ஜவான்' படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க வைக்கும் அட்லீயின் திட்டம் ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தியுள்ளது.
புஷ்பாவின் தொடர்ச்சியாக புஷ்பா தி ரூல் படத்தில் அல்லு அர்ஜுன் நடித்து வருகிறார்.இரண்டாம் பாகம் முதல் பாகத்தை விட பிரமாண்டமாகவும் சிறப்பாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.