ஜவான் வெற்றியை புகழ்ந்து தள்ளிய அல்லு அர்ஜூன்!
|'ஜவான்' திரைப்படம் உலகம் முழுவதும் கடந்த செப்டம்பர் 7-ந்தேதி திரையரங்குகளில் வெளியானது.
மும்பை,
ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் என தமிழில் வசூல் ரீதியாக தொடர் வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் அட்லீ. இவர் தற்போது ஷாருக்கான் நடிப்பில் 'ஜவான்' படத்தை இயக்கியுள்ளார். 'ஜவான்' படத்தில் ஷாருக்கானுடன் நயன்தாரா, விஜய் சேதுபதி இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மேலும் தீபிகா படுகோனே, யோகிபாபு, பிரியாமணி, சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் 'ஜவான்' திரைப்படம் உலகம் முழுவதும் கடந்த செப்டம்பர் 7-ந்தேதி திரையரங்குகளில் வெளியானது. 'ஜவான்' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் ஜவான் திரைப்பட வெற்றியை பிரபல நடிகர் அல்லு அர்ஜூன் பாராட்டியுள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் (முன்பு டுவிட்டர்) தளத்தில், உங்களுடைய இந்த வெற்றிக்காக பிரார்த்தனை செய்துள்ளோம் ஷாருக் சார், நிஜமாகவே ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. விஜய் சேதுபதி வழக்கம் போல் மிகச்சிறப்பாக நடித்துள்ளார்; நயன்தாரா தேசிய அளவில் ஜொலிக்கிறார்; அனிருத் தேசிய அளவில் லூப் மோடில் தன் பாடல்களை பாடவைத்துள்ளார். இந்தியன் பாக்ஸ் ஆபிஸ் வரலாற்றில் இவ்வளவு பெருமை கொள்ளவைத்த அட்லிக்கு பெரிய பெரிய வாழ்த்துக்கள்' என பாராட்டி பதிவிட்டுள்ளார்.