< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
ஹாலிவுட் படத்தில் அல்லு அர்ஜுன்
|31 Aug 2022 1:49 PM IST
தனுஷ் ‘தி கிரே மேன்’ ஹாலிவுட் படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற நிலையில் அந்த படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடிக்க இருக்கிறார். தனுசை தொடர்ந்து பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனும் ஹாலிவுட் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அல்லு அர்ஜுன் சமீபத்தில் அமெரிக்காவில் இந்திய வம்சாவளியினர் நடத்திய இந்திய சுதந்திரதின விழா நிகழ்ச்சியில் நியூயார்க் மேயருடன் கலந்து கொண்டார். பின்னர் அமெரிக்காவில் பிரபல ஹாலிவுட் டைரக்டர் ஒருவரை சந்தித்து அவர் இயக்கும் ஹாலிவுட் படத்தில் நடிப்பது குறித்து அல்லு அர்ஜுன் பேச்சு வார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.
ஹாலிவுட் படத்தில் அல்லு அர்ஜுன் நடிக்க வாய்ப்பு உள்ளதாகவும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அல்லு அர்ஜுன் ஹாலிவுட் படத்தில் நடிக்க உள்ள தகவல் அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது. அல்லு அர்ஜுன் தற்போது புஷ்பா 2-ம் பாகம் படத்தில் நடித்து வருகிறார். இதில் நாயகியாக ராஷ்மிகா மந்தனா மற்றும் பகத் பாசில் ஆகியோரும் நடிக்கின்றனர்.