< Back
சினிமா செய்திகள்
அல்லு அர்ஜுன் சிலை திறப்பு விழா-  குடும்பத்தோடு சென்ற அல்லு அர்ஜுன்
சினிமா செய்திகள்

அல்லு அர்ஜுன் சிலை திறப்பு விழா- குடும்பத்தோடு சென்ற அல்லு அர்ஜுன்

தினத்தந்தி
|
27 March 2024 6:53 AM IST

மெழுகு சிலை திறப்பு விழாவில் பங்கேற்க அல்லு அர்ஜுன் குடும்பத்துடன் துபாய் சென்று இருக்கிறார்.

சென்னை,

தென்னிந்தியாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அல்லு அர்ஜுன். இவர் நடித்த புஷ்பா திரைப்படம் உலகம் முழுவதும் பெறும் வெற்றியை பெற்றது. தற்போது இதன் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அல்லு அர்ஜுனுக்கு துபாயில் உள்ள பிரபலமான மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் மெழுகு சிலை வைக்கப்பட்டுள்ளது. பிரபலமானவர்களுக்கு மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் மெழுகு சிலைகள் வைக்கப்படுவது வழக்கம். இந்த பட்டியலில் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனும் இணைந்துள்ளார்.

இந்த மியூசியத்தில் அமிதாப்பச்சன், ஷாருக்கான், ஐஸ்வர்யா ராய், ரன்பீர் கபூர் ஆகிய இந்தி நட்சத்திரங்களின் சிலைகள் உள்ளன. தென்னிந்திய நடிகர்கள் யாருக்கும் சிலை வைக்கப்படவில்லை. முதல் முறையாக அல்லு அர்ஜுன் சிலை அமைந்திருக்கிறது.

லண்டனில் உள்ள அருங்காட்சியகத்தில் தெலுங்கு நடிகர்கள் பிரபாஸ், மகேஷ்பாபு ஆகியோருக்கு மெழுகு சிலை வைக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தனது மெழுகு சிலை திறப்பு விழாவில் பங்கேற்க அல்லு அர்ஜுன் குடும்பத்துடன் துபாய் சென்று இருக்கிறார்.

புஷ்பா படம் மூலம் பான் இந்தியா நடிகராக உயர்ந்துள்ள அல்லு அர்ஜுன் சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றுள்ளார்.

மேலும் செய்திகள்