ரூ.1,000 செலுத்தினால் போதும்... புதிய தொழில் தொடங்கிய சன்னி லியோனை பாராட்டும் ரசிகர்கள்
|நடிகை சன்னி லியோன் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் சில படங்களில் நடித்து வருகிறார்.
சென்னை,
ஆபாச படங்களில் நடித்து பிரபலமான சன்னி லியோன், ஒரு கட்டத்தில் அதிலிருந்து முழுமையாக வெளியே வந்தார். பின்னர் பாலிவுட் சினிமாவில் நுழைந்த அவர் கவர்ச்சி கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
2014-ம் ஆண்டு வெளியான 'வடகறி' படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் சன்னி லியோன் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து 'மதுர ராஜா', 'ஓ மை கோஸ்ட்', 'தீ இவன்' ஆகிய படங்களில் நடித்தார். மேலும் இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் சில படங்களில் நடித்து வருகிறார்.
நடிகை சன்னி லியோன் கடந்த 2011-ஆம் ஆண்டு டேனியல் வெபர் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் நடிகை சன்னி லியோன் புதிய தொழில் ஒன்றை தொடங்கி தொழில் அதிபராக களமிறங்கி உள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் அவர் புதிய ஓட்டல் ஒன்றை தொடங்கி இருக்கிறார். அட்டகாசமான பார் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் கொண்ட அந்த நட்சத்திர ஓட்டலுக்கு 'சிக்கா லோகா' என்று பெயர் வைத்துள்ளார். விரைவில் இந்தியா முழுவதும் இதன் கிளைகளை தொடங்கவும் சன்னி லியோன் திட்டமிட்டுள்ளார்.
7,000 சதுர அடியில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஓட்டலில் இந்திய, ஆசிய, ஐரோப்பிய மற்றும் இத்தாலிய உணவு வகைகள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த ஓட்டலில் ரூ.1,000 செலுத்தினால் போதும் அனைத்து வகையான உணவுகளையும் அளவில்லாமல் அதாவது அன்லிமிட்டெட் ஆக சாப்பிடலாம் என சலுகை அறிவிக்கப்பட்டு உள்ளது. நடிகை சன்னி லியோனின் இந்த புதிய முயற்சியை ரசிகர்கள் பலரும் தொடர்ந்து பாராட்டி வருகின்றனர்.