< Back
சினிமா செய்திகள்
இதெல்லாம், மனைவி கூட இருக்கும்போது எதிர்பார்க்க கூடாது... நடிகருக்கு ரசிகர் அறிவுரை
சினிமா செய்திகள்

இதெல்லாம், மனைவி கூட இருக்கும்போது எதிர்பார்க்க கூடாது... நடிகருக்கு ரசிகர் அறிவுரை

தினத்தந்தி
|
28 April 2024 11:25 AM IST

பாலிவுட் தம்பதியான ரித்தேஷ் மற்றும் ஜெனிலியா வெளியிட்ட வீடியோவை 4.3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர்.

புனே,

பாலிவுட்டின் பிரபல இளம் ஜோடி ரித்தேஷ் மற்றும் ஜெனிலியா. இதில், ஜெனிலியா தமிழில் விஜய், ஜெயம் ரவி, தனுஷ் உள்ளிட்ட பல நடிகர்களுடன் நடித்திருக்கிறார்.

பிரபல பாலிவுட் நடிகரான ரித்தேஷ் தேஷ்முக்கை காதலித்து வந்த ஜெனிலியா, 2012-ம் ஆண்டு அவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர்.

பிசியான தங்களுடைய வாழ்க்கை சூழலில் இருக்கும் அவர்கள் அவ்வப்போது, சமூக ஊடகங்களில் பதிவுகளை வெளியிடுவார்கள். இதற்கு பதிலாக, ரசிகர்கள் விமர்சனங்களை வெளியிடுவதும் வழக்கம்.

சமீபத்தில் அதுபோன்று இன்ஸ்டாகிராமில் அவர்கள் வெளியிட்ட வீடியோ ஒன்று ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. அதில் ஜெனிலியா கணவரை நோக்கி, இந்த கோடை விடுமுறையை எந்த பகுதிக்கு சென்று கொண்டாட போகிறோம்? என கேட்கிறார்.

அதற்கு ரித்தேஷ் தேஷ்முக்கோ, வருத்தம், கண்ணீர் எதுவும் இல்லாத அன்பு மட்டுமே காணப்படுகிற பகுதிக்கு என பதிலளிக்கிறார். இதற்கு ஜெனிலியா, இதபாருங்க... அதெல்லாம் சாத்தியமே இல்லை. என்ன ஆனாலும், உங்களுடன் ஒன்றாக வெளியே சென்று விடுமுறையை நான் கொண்டாட போகிறேன் என கூறுகிறார்.

இந்த வீடியோவை 4.3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். ஆயிரத்திற்கும் கூடுதலானோர் விமர்சனங்களையும் வெளியிட்டு உள்ளனர். அதில் ரசிகர் ஒருவர், நீங்கள் உங்களுடைய மனைவியுடன் இருக்கும்போது, துயரம், வருத்தம் எல்லாம் இல்லாத சூழலை எதிர்பார்க்கவே கூடாது என்று தெரிவித்து உள்ளார்.

நீங்கள் இருவரும் நகைச்சுவை தன்மை கொண்டவர்கள் என ஒருவரும், மிக சரியான, காமெடியான தம்பதி என மற்றொருவரும் தெரிவித்து உள்ளனர்.

ரெய்டு 2 என்ற படத்தில் ரித்தேஷ் நடித்து வருகிறார். இதற்காக டெல்லி, மும்பை, ராஜஸ்தானில் படப்பிடிப்பு நடைபெற திட்டமிடப்பட்டு உள்ளது. வருகிற நவம்பர் 15-ந்தேதி இந்த படம் திரையரங்கிற்கு வரவிருக்கிறது. ஹவுஸ்புல் என்ற காமெடி படத்தின் 5-ம் பாகத்திலும் ரித்தேஷ் கவனம் செலுத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்