< Back
சினிமா செய்திகள்
குழந்தையின் முதலாவது பிறந்தநாள்... முதல்முறையாக புகைப்படத்தை வெளியிட்டு நடிகை ஆலியாபட் உருக்கமான பதிவு...!
சினிமா செய்திகள்

குழந்தையின் முதலாவது பிறந்தநாள்... முதல்முறையாக புகைப்படத்தை வெளியிட்டு நடிகை ஆலியாபட் உருக்கமான பதிவு...!

தினத்தந்தி
|
7 Nov 2023 7:11 AM IST

நடிகை ஆலியாபட் கடந்த 2022ம் ஆண்டு இந்தி நடிகர் ரன்பீர் கபூரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

மும்பை,

இந்தி திரைத்துறையின் முன்னணி நடிகை அலியாபட். இவர் கடந்த 2022ம் ஆண்டு இந்தி நடிகர் ரன்பீர் கபூரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கடந்த ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு ராகா என பெயரிட்டுள்ளதாக அவர்கள் ஏற்கனவே அறிவித்திருந்தனர்.

தற்போது வரை இருவரும் குழந்தையின் புகைப்படத்தை வெளியிடவில்லை. இந்நிலையில் குழந்தை ராகாவின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதனை நடிகை ஆலியாபட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து ரசிகர்களுக்கு அறிவித்துள்ளார்.

அவர் 'எங்கள் மகிழ்ச்சி, எங்கள் வாழ்க்கை.. எங்கள் ஒளி. நீ என் வயிற்றில் இருந்தபோது உனக்காக இந்த பாடலை நேற்று வாசித்ததுபோல் உணர்கிறேன்.. நீ எங்கள் வாழ்க்கையில் வந்ததற்கு நாங்கள் பாக்கியம் செய்துள்ளோம். எங்கள் வாழ்வின் ஒவ்வொரு நாளையும் நீ ஒரு சுவையான கேக் துண்டைப்போல் உணர வைக்கிறாய்... இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் குட்டிப்புலி... நாங்கள் உன்னை அதிகமாக நேசிக்கிறோம்' என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்