ஆலியா பட், ஷர்வரி வாக் நடிக்கும் 'ஆல்பா' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
|ஒய்ஆர்எப் ஸ்பை யுனிவர்ஸின் அடுத்த படத்திற்கு ’ஆல்பா’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
மும்பை,
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை ஆலியா பட். இவர் தற்போது ஒய்ஆர்எப் ஸ்பை யுனிவர்ஸின் அடுத்த படத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு 'ஆல்பா' என்று பெயரிடப்பட்டுள்ளது. ஆலியா பட்டுடன் இணைந்து ஷர்வரி வாக் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்த படத்தினை 'தி ரெயில்வே மென்' என்ற தொடர் மூலம் அறியப்பட்ட இயக்குனர் ஷிவ் ரவைல் இயக்குகிறார். மேலும் இப்படத்தினை ஆதித்யா சோப்ரா தயாரிக்கிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்புகள் மும்பை மற்றும் காஷ்மீரில் நடைபெற உள்ளது. ஆக்சன் படமாக தயாராகும் இந்த படத்தில் பாபி தியோல் மற்றும் அனில் கபூர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இப்படம் அடுத்த ஆண்டு டிசம்பர் 25-ம் தேதி கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியாக உள்ளது.