< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்

"விரைவில் குழந்தை" ஆடையில் வாசகம்..! பிரபல நடிகையின் செயலால் ரசிகர்கள் அதிர்ச்சி!!

தினத்தந்தி
|
3 Sept 2022 12:16 PM IST

பிரம்மாஸ்திரா திரைப்பட புரொமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட நடிகை பிங் நிற ஆடையணிந்து வந்தார்.

ஐதராபாத்,

இந்தி நடிகர் ரன்பீன் கபூர் மற்றும் அவரது மனைவியும் நடிகையுமான ஆலியா பட் ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பிரம்மாஸ்திரா.

பிரம்மாஸ்திரா திரைப்படத்தை அயன் முகர்ஜி இயக்கியுள்ளார் மற்றும் ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் ஐந்து வருடங்களுக்கும் மேலாக தயாரிப்பில் உள்ளது.இந்த திரைப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு என பல மொழிகளிலும் இம்மாதம் 9ம் தேதி வெளியாக உள்ளது.

இதனிடையே ஐதராபாத்தில் நேற்று நடைபெற்ற பிரம்மாஸ்திரா திரைப்பட புரொமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட நடிகை ஆலியா பட் பிங் நிற ஆடையணிந்து வந்தார்.

இந்த நிகழ்ச்சியில் அவர், 'குழந்தை உள்ளது' என்ற வாசகத்தை பொறித்த ஆடையை அணிந்து வந்து, தான் கருவுற்றிருப்பதை சூசகமாக வெளிப்படுத்தினார்.இதை கவனித்த ரன்பீர் கபூர் உள்ளிட்ட படக்குழுவினர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.


மேலும், இந்த படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. விரைவில் பெற்றோர் ஆக உள்ள ரன்பீர் கபூர் - ஆலியா பட் தம்பதியினருக்கு பலரும் தங்களை வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளனர்.

அதில் சுவாரசியம் என்னவென்றால்,பிரம்மாஸ்திரா படப்பிடிப்பின் போது அவர்கள் ஒருவரையொருவர் காதலிக்க தொடங்கினர். 5 வருட பழக்கத்துக்கு பின் கடந்த ஏப்ரலில் ரன்பீர் கபூர் - ஆலியா பட் திருமணம் நடந்தது.

கடந்த ஜூன் மாதம், ஆலியா பட் மருத்துவமனையில் இருக்கும் ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டார். அப்போது தான் கர்ப்பமாக இருப்பதை அவர் முதன்முதலில் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்