< Back
சினிமா செய்திகள்
அலப்பறை குடுப்போம்... கவனம் ஈர்க்கும் கிடா படத்தின் பாடல்..!
சினிமா செய்திகள்

அலப்பறை குடுப்போம்... கவனம் ஈர்க்கும் 'கிடா' படத்தின் பாடல்..!

தினத்தந்தி
|
2 Nov 2023 10:00 PM IST

'கிடா' திரைப்படம் வெளியாவதற்கு முன்பே பல சர்வதேச விருதுகளை வென்றுள்ளது.

சென்னை,

அறிமுக இயக்குனர் ரா.வெங்கட் இயக்கத்தில், பூ ராமு, காளி வெங்கட் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் 'கிடா' (Goat). மேலும் இந்த படத்தில் மாஸ்டர் தீபன், பாண்டியம்மா, லோகி, கமலி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை ஶ்ரீ ஸ்ரவந்தி மூவீஸ் நிறுவனம் சார்பில் ஸ்ரவந்தி ரவி கிஷோர், கிருஷ்ண சைத்தன்யா தயாரித்துள்ளனர்.

மதுரை அருகே உள்ள கிராமத்தில் வாழும் ஒரு சிறுவனுக்கும், அவனது தாத்தாவிற்கும் மற்றும் ஒரு ஆட்டுக்கும் உள்ள உறவுப் பிணைப்பை சொல்லும் படமாக 'கிடா' திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படம் வெளியாவதற்கு முன்பே பல சர்வதேச விருதுகளை வென்றுள்ளது.

சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி கவனம் பெற்றது. இந்த நிலையில் இந்த படத்தின் 'அலப்பறை குடுப்போம்' என்ற பாடல் வெளியாகி உள்ளது. இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்