விழா மேடையில் அக்ஷய்குமாரால் அவதிப்பட்ட நடிகை
|நடிகை ஆல்யா அணிந்து இருந்த நீளமான ஆடை தரையில் சரிந்து கிடந்தது.
மும்பை,
இந்தி திரையுலகில் அதிக சம்பளம் பெற்று முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் அக்ஷய்குமார். தமிழில் ரஜினிகாந்தின் எந்திரன் 2-ம் பாகமான 2.0 படத்தில் வில்லனாக நடித்து இருந்தார்.
இந்த நிலையில் மேடையில் நடிகையின் ஆடையை அக்ஷய்குமார் மிதித்து சங்கடத்தை ஏற்படுத்திய சம்பவம் பரபரப்பாகி உள்ளது. அக்ஷய்குமார் தற்போது 'பேட் மியான் சோட்டே மியான்' என்ற இந்தி படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா மும்பையில் நடந்தது. விழா மேடையில் அக்ஷய்குமார் அருகில் இந்தி நடிகை ஆல்யா நின்று இருந்தார்.
அவர் அணிந்து இருந்த நீளமான ஆடை தரையில் சரிந்து கிடந்தது. அந்த ஆடையை அக்ஷய்குமார் கவனிக்காமல் மிதித்தபடி நின்றார்.
இதனால் ஆல்யாவால் அசைய முடியவில்லை. சில நிமிடங்கள் என்ன செய்வது என்று புரியாமல் தவித்தார். ஆனாலும் அக்ஷய்குமார் உடையை மிதித்தபடியே மேடையில் இருந்த மற்றவர்களுடன் பேசிக்கொண்டு இருந்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.