நடிகர் அக்சய் குமாருக்கு கொரோனா தொற்று?
|பாலிவுட் நடிகர் அக்சய் குமாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அக்சய் குமார். 56 வயதாகும் இவர், தமிழில் ரஜினியுடனான 2.0 திரைப்படத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் இவரின் நடிப்பில் வெளியான ஓஎம்ஜி -2 திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த 2020-ம் ஆண்டு வெளியான திரைப்படம் சூரரைப் போற்று. இத்திரைப்படம் மாபெரும் ஹிட் அடித்தது. இந்நிலையில் இந்த படத்தை இயக்குனர் சுதா கொங்கரா இந்தியில் 'சர்பிரா' என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளார். இதில் அக்சய் குமார் கதாநாயகனாக நடித்திருக்கிறார். ராதா மதன் கதாநாயகியாக நடித்த இப்படத்தில் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசை அமைக்க, சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ளது. டிரெய்லர் அண்மையில் வெளியானநிலையில், இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பைப் பெற்றுவருகிறது.
இந்நிலையில் அக்சய் குமாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தன்னைதனிமைப்படுத்திக் கொண்டு இருப்பதாகவும் ஆனந்த அம்பானி திருமணத்துக்கு செல்லவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.