'சர்பிரா' படப்பிடிப்பின்போது தந்தையின் மரணத்தை நினைத்து அழுத அக்சய் குமார்
|கிளிசரினை பயன்படுத்தாமல் அழுததாக அக்சய் குமார் கூறினார்.
சென்னை,
நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த 2020-ம் ஆண்டு வெளியான திரைப்படம் சூரரைப் போற்று. இத்திரைப்படம் மாபெரும் ஹிட் அடித்தது. இந்நிலையில் இந்த படத்தை இயக்குனர் சுதா கொங்கரா இந்தியில் 'சர்பிரா' என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளார். இதில் அக்சய் குமார் கதாநாயகனாக நடித்திருக்கிறார். ராதா மதன் கதாநாயகியாக நடித்த இப்படத்தில் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.
இத்திரைப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசை அமைக்க, சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ளது. டிரைலர் அண்மையில் வெளியானநிலையில், இன்று இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்நிலையில், நடிகர் அக்சய் குமார், உணர்ச்சிகரமான காட்சிகளின் படப்பிடிப்பின்போது தனது தந்தையின் மரணத்தை நினைத்து அழுததாக கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,
'இந்த படத்தில் எனக்கு சம்பந்தமாக பல விசயங்கள் இருந்தன. இதில், தனது தந்தை இறந்த பின்பு கதாநாயகன் பேரதிர்ச்சிக்கு ஆளாகி அழும் காட்சி வரும். அந்த காட்சியை படமாக்கும்போது நான் என் தந்தையின் மரணத்தை நினைத்து கொண்டு உண்மையாக அழுதேன். கிளிசரின் எதையும் பயன்படுத்தவில்லை.
காட்சி எடுக்கப்பட்ட பின்பு இயக்குனர் கட் சொல்கிறார், ஆனாலும் என் தலை குளிந்தபடியே இருந்தது. ஏனென்றால் நான் அப்போதும் அழுது கொண்டுதான் இருந்தேன். அதிலிருந்து வெளியே வர எனக்கு மிகவும் கடினமாக இருந்தது, என்றார்.