< Back
சினிமா செய்திகள்
ஏஜென்ட்  பட விமர்சனம்:  கேலி செய்தவர்களுக்கு நடிகை அமலா பதிலடி
சினிமா செய்திகள்

ஏஜென்ட் பட விமர்சனம்: கேலி செய்தவர்களுக்கு நடிகை அமலா பதிலடி

தினத்தந்தி
|
1 May 2023 4:47 PM IST

அமலா மகன் அகில் நடித்த படத்துக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்காமல் தோல்வி அடைந்துள்ளது. பலரும் இந்தப்படத்தையும், அகிலையும் அவதூறு செய்தும் விமர்சித்தும் வலைத்தளத்தில் கருத்துகள் பதிவிட்டு வருகிறார்கள்.

தமிழ், தெலுங்கு திரையுலகில் 1980 மற்றும் 90-களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த அமலா தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களின் மகன் அகில் படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

தற்போது அகில் நடிப்பில் ஏஜெண்ட் என்ற படம் திரைக்கு வந்துள்ளது. இந்தப்படத்துக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்காமல் தோல்வி அடைந்துள்ளது. பலரும் இந்தப்படத்தையும், அகிலையும் அவதூறு செய்தும் விமர்சித்தும் வலைத்தளத்தில் கருத்துகள் பதிவிட்டு வருகிறார்கள்.

இதற்கு நடிகை அமலா பதிலடி கொடுத்துள்ளார். அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில். ''கேலி என்பது பாதுகாப்பு இல்லாத தன்மை காரணமாக வெளிப்படுவது ஆகும். ஆனால் அவை வெற்றிக்கே வழிவகுக்கும். நான் ஏஜெண்ட் படம் பார்த்து நிஜமாகவே ரசித்தேன்.

படத்தில் சில குறைகள் இருந்தாலும் நீங்கள் வெளிப்படையான மனதோடு பார்த்தால் ரசிப்பீர்கள். நான் படம் பார்க்கச்சென்ற தியேட்டர் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. அதில் அம்மாக்களும், பாட்டிகளும் நிறைய இருந்தனர். அதிரடி சண்டைக்காட்சிகள் வந்தபோது ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். அகில் நடிக்கும் அடுத்த படம் இன்னும் நன்றாக இருக்கும்'' என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்