விஜயின் 'வாரிசு' டிரைலர் வெளியான நிலையில் அஜித்தின் 'துணிவு' ரிலீஸ் தேதி அறிவிப்பு - ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி...!
|அஜித்தின் துணிவு படத்தின் டிரைலர் கடந்த இரு நாட்களுக்கு முன்னர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
சென்னை,
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் 'துணிவு'. இந்த படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது.
'துணிவு' திரைப்படம் வருகிற பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. அதேபோல் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள 'வாரிசு' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. வரும் 12-ம் தேதி ரிலீஸ் ஆகும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து உள்ளார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இந்நிலையில் அஜித்தின் துணிவு படத்தின் டிரைலர் கடந்த இரு நாட்களுக்கு முன்னர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், துணிவு டிரைலர் சில தினங்களுக்கு முன்னர் வெளியாகிய நிலையில் இன்று மாலை 5 மணிக்கு விஜயின் வாரிசு படத்தில் டிரைலர் வெளியாகி சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.
வாரிசு படத்தில் டிரைலரை ரசிகர்கள் கொண்டாடி வரும் வேளையில் அஜித் ரசிகர்களுக்கு மேலும் ஒரு இன்ப அதிர்ச்சியாக துணிவு படம் ஜனவரி 11ம் தேதி வெளியாகும் என அப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தனது டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளார். இது அஜித் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
விஜையின் வாரிசு படத்தின் டிரைலர் வெளியான நிலையில் அஜித்தின் துணிவு படம் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது இரு நடிகர்களின் ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.