மே 1-ல் ரீ-ரிலீசாகிறது அஜித்தின் 'மங்காத்தா' திரைப்படம்
|தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் டிரெண்ட் போய்க் கொண்டிருக்கிறது.
சென்னை,
வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த 2011-ம் ஆண்டு அஜித்குமார் நடிப்பில் வெளியான திரைப்படம் 'மங்காத்தா'. இந்த படத்தில் அர்ஜுன், திரிஷா, பிரேம்ஜி, வைபவ், மஹத், அஞ்சலி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். அஜித் ஏற்று நடித்த நெகட்டிவ் கதாபாத்திரம் அப்போது பெரிதும் பேசப்பட்டது.
வசூல்ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்ற 'மங்காத்தா' திரைப்படம் அஜித்தின் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்ததோடு, ரசிகர்களால் இன்று வரை வெகுவாக கொண்டாடப்படும் படங்களில் ஒன்றாக உள்ளது.
தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் டிரெண்ட் போய்க் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், 'மங்காத்தா' திரைப்படம் 13 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளது. அதன்படி, வருகிற மே 1-ந்தேதி அஜித்தின் பிறந்தநாளையொட்டி 'மங்காத்தா' திரைப்படம் ரீ-ரிலீசாகிறது. இதே போல விஜய் நடித்த 'கில்லி' திரைப்படம் வருகிற 20-ம் தேதி ரீ-ரிலீசாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.