அஜித்தின் 'குட் பேட் அக்லி' படப்பிடிப்பு இன்று தொடக்கம்
|நடிகர் அஜித்குமார் மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகும் குட் பேட் அக்லி திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று ஐதராபாத்தில் பூஜையுடன் தொடங்கி உள்ளது.
சென்னை,
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித், துணிவு படத்தை தொடர்ந்து 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் கதாநாயகியாக திரிஷா நடித்து வருகின்றார். இப்படத்தை தடையறத் தாக்க, மீகாமன், தடம், கலகத் தலைவன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மகிழ்த்திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. மேலும் இப்படத்தில் அர்ஜுன், ஆரவ், ரெஜினா, சந்தீப் கிஷன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். சமீபத்தில் அஜித்தின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியானது. அதன்படி அஜித்தின் 63-வது படத்தை . 'மார்க் ஆண்டனி' பட இயக்குனரான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார்.
இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த திரைப்படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்க உள்ளார். இந்த படத்திற்கு 'குட் பேட் அக்லி' என பெயரிடப்பட்டுள்ளது. படம் 2025-ம் ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், "குட் பேட் அக்லி" படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் ஐதராபாத்தில் தொடங்கி உள்ளது.