< Back
சினிமா செய்திகள்
அஜித் பிறந்தநாளை முன்னிட்டு ரீ-ரிலீசாகும் பில்லா திரைப்படம்
சினிமா செய்திகள்

அஜித் பிறந்தநாளை முன்னிட்டு ரீ-ரிலீசாகும் 'பில்லா' திரைப்படம்

தினத்தந்தி
|
25 April 2024 10:07 AM IST

கடந்த 2007-ம் ஆண்டு விஷ்ணுவர்தன் இயக்கத்தில் வெளியான 'பில்லா' படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.

சென்னை,

தமிழ் திரைத்துறையில் கடந்த காலங்களில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் ஆன திரைப்படங்களை ரீ- ரிலீஸ் செய்வது தற்போது டிரெண்டாகி உள்ளது. அவ்வாறு, சிவா மனசுல சக்தி, விண்ணை தாண்டி வருவாயா, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம் உள்ளிட்ட படங்கள் சமீபத்தில் ரீ- ரிலீஸ் செய்யப்பட்டது.

தொடர்ந்து, நடிகர் விஜய் நடித்து வெளியான கில்லி திரைப்படம் 20 ஆண்டுகள் கழித்து சமீபத்தில் ரீ-ரிலீஸ் ஆனது. இந்த நிலையில், நடிகர் அஜித் குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு 'பில்லா' திரைப்படம் வருகிற மே 1-ந்தேதி ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2007-ம் ஆண்டு விஷ்ணுவர்தன் இயக்கத்தில் வெளியான இந்த படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றன. 'பில்லா' திரைப்படத்தில் நமீதா, நயன்தாரா, பிரபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

'மங்காத்தா' திரைப்படமும் நடிகர் அஜித் குமார் பிறந்தநாளை முன்னிட்டு மே 1-ந்தேதி ரீ-ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்