அஜித்தின் 32 வருட திரைப்பயணம்: 'குட் பேட் அக்லி' படக்குழு சிறப்பு போஸ்டர் வெளியீடு
|நடிகர் அஜித் திரைத்துறையில் நுழைந்து 32 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில் அதை சிறப்பிக்கும் விதமாக 'குட் பேட் அக்லி' படக்குழு சிறப்பு போஸ்டரை வெளியிட்டுள்ளது.
சென்னை,
நடிகர் அஜித்குமார் திரைத்துறைக்கு வந்து 32 ஆண்டுகள் நிறைவு பெறுவதையோட்டி பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். யாருடைய உதவியும் இல்லாமல் தனியாக திரைத்துறையில் நுழைந்து தனது கடின உழைப்பினால் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கி ஸ்டார் நடிகராக உருவெடுத்தவர் அஜித்.
'அமராவதி' படத்தின் மூலம் கதாநாயகனான அறிமுகமான அஜித், 'ஆசை', 'காதல் கோட்டை' படங்கள் மூலம் பிரபலமானார். இவரது பல படங்கள் வரலாற்று சாதனை படைத்துள்ளது.
நடிகர் அஜித், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் இணைந்துள்ளார்.இப்படத்துக்கு, 'குட் பேட் அக்லி' எனப் பெயரிடப்பட்டுள்ளது. பொங்கலுக்கு வெளியாகும் இப்படத்தின் இரண்டு போஸ்டர்களை வெளியிட்டுள்ளனர். 'குட் பேட் அக்லி'யின் முதல்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் நடிகர் அஜித்தின் காட்சிகள் எடுக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து, விடாமுயற்சி படப்பிடிப்புக்காக அஜித் அஜர்பைஜான் சென்றார்.
மேலும், 'குட் பேட் அக்லி' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு மீண்டும் ஹைதராபாத்தில் துவங்கும் என்றும் அதனைத் தொடர்ந்து அமெரிக்காவில் சில நாள்கள் படப்பிடிப்பு நடக்கும் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் நடிகர் அஜித் திரைத்துறையில் நுழைந்து 32 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில் அதை சிறப்பிக்கும் விதமாக 'குட் பேட் அக்லி' படக்குழு சிறப்பு போஸ்டரை வெளியிட்டுள்ளது. இப்போஸ்டர் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது