< Back
சினிமா செய்திகள்
போட்டோ கிராபராக மாறிய அஜித்... விடாமுயற்சி படப்பிடிப்பு தளத்தில் எடுத்த புகைப்படங்கள் வைரல்...!
சினிமா செய்திகள்

போட்டோ கிராபராக மாறிய அஜித்... விடாமுயற்சி படப்பிடிப்பு தளத்தில் எடுத்த புகைப்படங்கள் வைரல்...!

தினத்தந்தி
|
15 Dec 2023 6:35 PM IST

விடாமுயற்சி படப்பிடிப்பு தளத்தில் நடிகர் அஜித் எடுத்த புகைப்படங்களை சுரேஷ் சந்திரா பகிர்ந்துள்ளார்.

சென்னை,

இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கும் திரைப்படம் ' விடாமுயற்சி'. இப்படத்தில் அஜித் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தில் நடிகை திரிஷா, நடிகர்கள் அர்ஜுன், ஆரவ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இப்படம் ஹாலிவுட் தரத்தில் உருவாக்கப்படுவதால் படப்பிடிப்பு முழுவதும் அஜர்பைஜான் நாட்டிலேயே நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் விடாமுயற்சி படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்து விட்டு நடிகர் அஜித் சென்னை திரும்பினார். பின்னர் கடந்த வாரம் மீண்டும் படப்பிடிப்பிற்காக அஜர்பைஜான் நாட்டிற்கு சென்றார்.

இந்நிலையில், நடிகர் அஜித் போட்டோ கிராபராக மாறி விடாமுயற்சி படப்பிடிப்பு தளத்தில் எடுத்த புகைப்படங்களை அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா தனது எக்ஸ் வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அவர் அந்த பதிவில் நடிகர் அர்ஜுன், நடிகை ரெஜினா, இயக்குனர் மகிழ் திருமேனி, ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் ஆகியோரின் புகைப்படங்களை பகிர்ந்து 'புகைப்படம் எடுப்பதில் அஜித்குமாரின் காதல்' என பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வளைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்