< Back
சினிமா செய்திகள்
புதிய தொழில் தொடங்கிய அஜித்
சினிமா செய்திகள்

புதிய தொழில் தொடங்கிய அஜித்

தினத்தந்தி
|
7 Oct 2023 8:10 AM IST

மோட்டார் சைக்கிள் சுற்றுலாவுக்காக புதிய நிறுவனத்தை அஜித் தொடங்கி இருக்கிறார்.

சினிமாவை தாண்டி பைக் பந்தய பிரியராக இருக்கும் நடிகர் அஜித்குமார் நாடு முழுவதும் பைக்கில் சுற்றி வந்தார். வெளிநாடுகளிலும் பைக்கில் பயணித்தார். சமீபத்தில் பைக் சுற்றுலாவை தொழிலாக ஆரம்பிக்க புதிய நிறுவனம் தொடங்கப்போவதாக அறிவித்தார்.

பைக்கில் தொலைதூர பயணம் செய்ய ஆர்வம் உள்ளவர்களை பாதுகாப்பாக பயணம் செய்ய வைப்பது மற்றும் தெரியாத இடங்களுக்கு அழைத்து சென்று சுற்றிக்காட்டுவது போன்ற சேவைகளை தனது நிறுவனம் செய்யும் என்றும் தெரிவித்து இருந்தார்.

அதன்படி தற்போது மோட்டார் சைக்கிள் சுற்றுலாவுக்காக புதிய நிறுவனத்தை அஜித் தொடங்கி இருக்கிறார். நாடு முழுவதும் பைக்கில் சென்று சுற்றுலா தலங்களை பார்வையிட தனது நிறுவனத்தை அணுகலாம் என்றும், பாதுகாப்பான பயணத்துக்கான ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படும் என்றும் அஜித்குமார் தெரிவித்து உள்ளார்.

அஜித்குமார் போன்று பைக்கில் சென்று இடங்களை சுற்றி பார்க்க ஆர்வம் உள்ளவர்கள் நிறைய பேர் உள்ளனர். அவர்களுக்கு இந்த நிறுவனம் உதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அஜித்குமார் தற்போது 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு அஜர்பைஜானில் தொடங்கி உள்ளது.

மேலும் செய்திகள்